வெல்த் டிரஸ்ட் செகுரிடீஸ் லிமிடட்

வெல்த் டிரஸ்ட் செகுரிடீஸ் லிமிடட் (வெல்த் டிரஸ்ட்) ஆனது இலங்கை மத்திய வங்கியால் நியமிக்கப்பட்ட அரச பிணையங்களுக்கான ஒரு முதன்மை முகவர் ஆவர். ஒரு முதன்மை முகவரான நாம், அரச பிணையங்களுக்கான சந்தையில் ஒரு விசேட இடை நிலையினராகப் பங்காற்றுவதுடன் நாட்டின் நிதிக்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகவும் விளங்குகின்றோம்.

வாடிக்கையாளர் பதிவு படிவங்கள்    நிறுவனங்களுக்கானது   |    தனிப்பட்டவர்களுக்கானது


நிதியியல் பொருட்கள் மற்றும் சேவைகள்அரச பிணையங்களானது அரசாங்கத்தின் வரவு செலவு திட்ட நிதித்தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியின் பொது கடன் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது. நாம் வழங்கும் நிதியியல் பொருட்களில் அரச பிணையங்களான திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் பிரதானமானவையாகும். வேறு பல பிணையங்களும் வெல்த் டிரஸ்ட் போன்ற அர்ப்பணிப்பு முதன்மை முகவர்கள் ஊடாக நிதிச்சந்தைக்கு மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்படுகின்றது.


திறைசேரி உண்டியல்கள் (T-Bills)


குறுகிய கால (3, 6, 12 மாதம்) கடன் பத்திரங்களான திறைசேரி உண்டியல்கள், வாராந்த ஏலத்தினூடாக வழங்கப்படுகின்றன. இவற்றின் பிரதான சிறப்பியல்புகள்.திறைசேரி பிணையங்கள் (T-Bonds)


நீண்ட கால (2-20 வருடங்கள்) கடன் பத்திரங்களான திறைசேரி பிணையங்கள் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்படுகின்றன இவற்றின் பிரதான சிறப்பியல்புகள்.


இலங்கை அபிவிருத்தி பிணையங்கள்


2 மற்றும் 3 வருட முதிர்ச்சியுடைய அமெரிக்க டொலர் முகப்பெறுமதியுடைய இலங்கை அபிவிருத்திப் பிணையங்கள் அமர்வு செய்யப்பட்ட முகவர்களூடாக வழங்கப்படுகின்றது. இவற்றின் பிரதான சிறப்பியல்புகள்.